Latest news: 50,000 வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்க அமைச்சரவைக்கு ஆலோசனை.
tamil news: 2024 ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஒன்றாக முன்வைக்கப்பட்ட 50,000 வீட்டு உரிமைப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை, நாளை அமைச்சரவையில் கையளிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு இன்று(25.01.2024) தெரிவித்துள்ளது.
அதாவது, வீட்டு உரிமையாளர்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குவதிலுள்ள செலுத்தவேண்டிய நொந்தாரிசு கட்டணம் உட்பட்ட பிற வரிகளுக்கு செலவிடப்படும் பணம், அரச திறைசேரியினால் ஏற்கப்படும் என முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நிதியமைச்சின் அவதானிப்புகளுக்காக இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் மீதான அவதானிப்புகளும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*
*எனவே, எமது செய்திகளை உங்கள் நண்பர்கள், ஏனைய உறவுகள் மற்றும் குழுமங்களுக்கும் பகிர்ந்து (Share & Forward) கொள்ளுங்கள்...*
மேலும் பல செய்திகளுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்...



Check out நரன் Media network
*Facebook Pages*
*Instagram*
*WhatsApp group*
*Twitter*
Labels:
உள்நாட்டுச் செய்திகள்
