Latest news: 3 பிள்ளைகளை அறைக்குள் பூட்டிவிட்டு யாத்திரை! தம்பதிகளுக்கு ஏற்பட்ட நிலை...
tamil news: நாட்டின் தெற்குப்பகுதியில் குளியாப்பிட்டி, தீகல்ல பிரதேசத்தில் தங்களுடைய 3 பிள்ளைகளையும் அறைகளுக்குள் வைத்து பூட்டி விட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக சிவனொளிபாத மலைக்கு சென்றுள்ளனர் ஒரு தம்பதி. குறித்த புனித யாத்திரைக்குச் சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 3 பிள்ளைகளும் 8, 5 மற்றும் 3 வயதுடையவர்கள் எனவும் காவல்துறை அவசர சேவை இலக்கம் 119 ஊடாக பொதுமக்களிடமிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து பிள்ளைகளை மீட்டதுடன், பூட்டி வைக்கப்பட்டிருந்தமையினால் பயக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 3 பிள்ளைகளுக்கும் பிஸ்கட்இ பாண் போன்றவற்றை உணவாக வைத்துவிட்டுஇ குறித்த தம்பதிகள் புனித யாத்திரை சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று(24.01.2024) வீடு திரும்பிய பெற்றோரை காவல்துறை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*


