Latest news: ஈழத்து ரசிகர்களை சந்தித்த தமிழக பிரபலம்! மகிழ்ச்சியிலும் கோபத்திலும் ரசிகர்கள்!!! (வீடியோ உள்ளே)
tamil news: கடந்த தைப்பூச தினத்தில்(25.01.2024) ஈழத்திற்கு VJ Siddhu Vlogs Youtube சனலின் குழுவினர் வருகை தந்திருந்தனர்.
அதாவது,
'இலங்கை சந்திப்பு' எனும் பெயரில் ஏது VJ Siddhu Vlogs குழுவினரான VJ சித்து, ஹர்சத்கான், சூர்யா மற்றும் பாலபிரபாகர் ரசிகர் சந்திப்பு ஒன்றினை செய்திருந்தனர்.
பலாலி வீதியிலுள்ள திண்ணை ஹோட்டலில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் 200 பேரிற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் குறித்த ஏற்பாடு செய்தமை குறித்து பலருக்கு தெரியாத நிலையில் ஏது சித்துவினை சந்திக்க இயலாது போன ரசிகர்கள் செல்லமாக கோபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து VJ சித்து குறிப்பிடும் போது "இந்தளவு ஆதரவினை தாங்கள் எதிர்பாக்கவில்லை" எனவும் தாங்கள் திரும்பிச் செல்ல முதல் அனைத்து ரசிகர்களையும் சந்திக்கும் வகையில் ஏதாவது செய்வதாகவும் கூறியிருந்தார்.
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*


