வவுனியா: மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு!
tamil news: புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று(07.02.2025) மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் காவற்துறையினர் தெரிவித்துள்னர்.
வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் ந.மதுசாளினி என்ற சிறுமி(வயது 6) கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார்.
அப்போது தவறுதலாக கீழே விழுந்தபோது நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவஇடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
வீட்டார் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வந்தபோதும் சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டுவருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் புளியங்குளம் காவற்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.