வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

ஒரு மாதத்தில் 203 பேர் உயிரிழப்பு; மாட்டிக்கொள்ளும் இலங்கை


tamil news: இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதிவிபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.


ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதிவிபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.


இதேவேளை 2024ம் ஆண்டில்,

கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் 1,585 வீதிவிபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் சுமார் 1,667 பேர் உயிரிழந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.


2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7ம் திகதிவரை 194 கோர வீதிவிபத்துக்களும் 514 கடுமையான வீதிவிபத்துக்களும் மற்றும் 880 சிறியளவிலான வீதிவிபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இந்த விபத்துக்கள் அனைத்தும் 2025 பெப்ரவரி மாதம் 07ம் திகதிவரை பதிவாகியுள்ளதுடன் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆகும் என காவற்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.