வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

உப்புக்கு அனுர அரசாங்கத்தில் விலை அதிகரிப்பு!!!


tamil news: உப்பு விலையை அதிகரிக்க அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.


இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலை அதிகரித்ததன் காரணமாக இவ்வாறு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதன்படி, 400ப உப்பு பக்கட் ஒன்றின் விலை 100 ரூபாவில் இருந்து 20 ரூபாவால் அதிகரித்து 120 ரூபாவாகவும், ஒரு கிலோ கல் உப்பு பக்கட் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரித்து 120 ரூபாவில் இருந்து 180 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


இருப்பினும், இந்த விலை உயர்வு தற்காலிக தீர்மானம் என்று அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


நாட்டில் வருடாந்த உப்பு தேவை 200,000 மெற்றிக் தொன் என்று கூறப்படுகின்றது.


இருப்பினும் கடந்த வருடத்தின் கடைசி காலாண்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் உப்பு உற்பத்தி குறைவடைந்தது.


இதன் காரணமாக அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய முடிவுசெய்தது.


அதன்படி, சுமார் 12,000 மெற்றிக் தொன் உப்பு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.


எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அம்பாந்தோட்டை உப்புத் தொழிற்சாலையில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதால் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் உப்பு விநியோகத்தை மேற்கொள்ள முடியுமென நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


நாட்டின் உப்புத்தேவையில் 50% அம்பாந்தோட்டை உப்பளத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படுகின்றது.


மேலும் இதற்கு மேலதிகமாக பரந்தன் மற்றும் புத்தளம் உப்பளங்களும் நாட்டின் உப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.