ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பறக்கவுள்ள அனுர!
tamil news: 2025ம் ஆண்டு உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10ம் திகதி முதல் 13ம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம் செய்யவுள்ளார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரிலேயே அநுர இந்த பயணத்தை மேற்கொள்வதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்