யாழிலிருந்து முல்லைத்தீவு பேரூந்து சாரதி மீது வாள்வெட்டு!!!
tamil news: யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணிகளை ஏற்றிவந்த இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்து சாரதி மீது விசுவமடுப்பகுதியில் வைத்து இனந்தெரியாதோர் மேற்கொண்ட வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் சாரதி படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம்(07.02.2025) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பயணிகளை இறக்குவதற்காக பேருந்தை நிறுத்தியபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேரூந்தில் பயணித்த பயணிகள் நடுவீதியில் நீண்டநேரமாக காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்