வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

பாராளுமன்ற சாப்பாட்டு விலை அதிகரிப்பு!


tamil news: இன்றையதினம்(05.02.2025) முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணவுக்காக சுமார் 2,000 ரூபாய் பணத்தை செலுத்தவேண்டும்.


பாராளுமன்றத்தில் உணவுப்பொருட்களின் விலை உயர்வு இந்த மாதம் 1ம் திகதிமுதல் அமுலுக்கு வந்தது.


ஆனால் இந்த மாதத்திற்கான பாராளுமன்றம் அமர்வு இன்று(05.02.2025) கூடியதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணவுக்கான குறித்த கட்டணத்தை செலுத்தவேண்டியிருந்தது.


பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவிற்காக நாளாந்தம் வசூலிக்கப்படும் பணம் 2,000 ரூபாவாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற சபை குழுவில் கடந்த 23ம் திகதி தீர்மானிக்கப்பட்டது.


அதன்படி பாராளுமன்ற உணவகத்தில் காலை உணவின் விலை ரூ.600 ஆகவும் மதிய உணவு ரூ.1,200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


ஒரு கோப்பை தேநீரின் விலை சுமார் 200 ரூபாய் என இந்த புதிய விலைகள் பெப்ரவரி 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.