குடும்பத்தலைவர் படுகொலை: இரு இளைஞர்கள் கைது!
tamil news: நேற்று(05.02.3035) அதிகாலைப்பொழுதில் மட்டக்களப்பு வாழைச்சேனை, ஓமடியாமடு பகுதியில் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு பலியானவர் திருப்பழுகாமம் பகுதியைச் சேர்ந்த 63 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையிலிருந்து,
2 உறவினர்களுக்கு இடையேயான பழைய தகராறு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து ஒருவரையொருவர் கட்டைகளால் தாக்கிக் கொண்டபோது, தகராறைத் தீர்க்க முயன்ற ஒருவர் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பாக 19 மற்றும் 26 வயதுடைய 2 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை காவற்துறையிளர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்