முழங்காவிலில் 40,000 போதைமாத்திரைகளுடன் ஐவர் கைது!
tamil news: கிளிநொச்சி, முழங்காவில் காவற்துறை பிரிவிற்குட்பட்ட முழங்காவில் பிரடீதசத்தில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக நேற்றுமுன்தினம்(29.01.2025) வீட்டினை சுற்றிவளைத்த போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு 5 சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 40,000 போதைப்பொருள் மாத்திரைகளை கைப்பற்றி முழங்காவில் காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து முழங்காவில் காவற்துறை சந்தேகநபர் ஐவரையும் கிளிநொச்சி மாவட்டநீதிமன்றம் முற்படுத்தியபொழுது எதிர்வரும் 06ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் வட்டக்கண்டல், தலைமன்னார், முழங்காவில் பகுதியை சேர்ந்தர்கள்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முழங்காவில் காவற்துறை மேற்கொண்டு வருகின்றது.