இரணைமடு குளத்தில் யானையின் சடலம்! நாற்றமடிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு
tamil news: கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுக்குளத்தின் கரையில் சுமார் 15 நாட்களாக காயத்துடன் போராடிய யானை நேற்று(14.01.2025) உயிரிழந்துள்ளது.
ஆனால் குறித்த யானை இவ்வாறு காயத்துடன் அவதிப்படுவதாக தாங்கள் வனசீவராசிகள் திணைக்களத்திற்கு தெரிவித்தநிலையில் அவர்கள் உரிய சிகிச்சை வழங்கவில்லை என அந்தப்பகுதியிலுள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து தற்பொழுது இறந்த யானையின் உடலிலிருந்து நாற்றம் வருவதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும் இறந்த சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்