லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பிரித்தானிய தொலைக்காட்சி பிரபலம் பலி!!!
tamil news: பிரித்தானியா தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி புகழ்பெற்ற 'ரோரிகலம் சைக்ஸ்' அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 'ரோரி கலம் சைக்ஸ்' மாலிபுவில் உள்ள அவரது வீட்டில் கார்பன்மொனாக்சைட்(CO) வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
பெருமூளைவாதநோயினால் பாதிக்கப்பட்ட தனது மகனை காட்டுதீயிலிருந்து காப்பாற்றுவதற்கு தான் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை என தாயார் ஷெலி சைக்ஸ் தெரிவித்துள்ளார்.
மகனின் இழப்பு குறித்து அவர் தெரிவிக்கையில்,
"எனது மகன் வீடு தீயில் சிக்குண்டது, நான் அவரை காப்பாற்ற முயற்சித்தேன்.
ஆனால் தண்ணீர் வரவில்லை, அது நிறுத்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து உள்ளுர் தீயணைப்பு பிரிவினரின் உதவியை கேட்க ஓடினேன்.
'அம்மா என்னை விட்டுவிட்டுபோகாதே!'
என அவன் அலறினான்.
எனது கை உடைந்திருந்தது அதனால் அவரை தூக்கமுடியவில்லை.
எந்த தாயும் அவ்வாறான சூழ்நிலையில் தனது மகனை விட்டுவிட்டு போகமாட்டாள்!
நான் திரும்பிவந்தபோது மகன் இருந்த பகுதி முற்றாக தீக்கிரையாகிவிட்டது."
என தாயார் தெரிவித்துள்ளார்.
மேலும்,
எனது மகனின் உயிரிழப்பினால் நான் முற்றாக மனதுடைந்துள்ளேன் என சமூக ஊடகத்தில் பதிவுசெய்துள்ள அவர், என்னால் தீயை அணைக்க முடியவில்லை 50 தீயணைப்பு வீரர்கள் இருந்தும் அவர்களிடம் தண்ணீர் இல்லை என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.