வவுனியா: புகையிரதம் மோதி காவற்துறை உத்தியோகத்தர் படுகாயம்!
tamil news: வவுனியாவில் புகையிரதம் மோதி போக்குவரத்து காவற்துறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதமானது இன்று(31.01.2025) காலை 9 மணியளவில் வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் புகையிரதக்கடவையை கடக்கமுயன்ற மோட்டர்சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டர்சைக்கிள் சாரதியான 44 வயதுடைய போக்குவரத்து காவற்துறை உத்தியேபகத்தர் காயமடைந்துள்ளார்.
இதனைதொடர்ந்து காயமடைந்த காவற்துறை உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் காவற்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்