கோட்டை - காங்கேசன்துறை இரவுநேர தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!
tamil news: வடக்கு தொடருந்து பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான இரவுநேர தொடருந்து சேவை இன்று(31.01.2025) மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் இந்த தொடருந்து சேவை இடம்பெறள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பொதுமுகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் வடக்கு தொடருந்து பாதையின் புனரமைப்புபணிகள் காரணமாக யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவையினை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதுடன்,
தொடர்ந்து நிலவிய ஆளணிப்பற்றாக்குறை காரணமாக குறித்த தொடருந்து சேவையினை மீண்டும் ஆரம்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இருந்தாலும் அமைச்சரின் ஆலோசனைக்கமைய தொடருந்து சேவையினை வழமைக்கு கொண்டுவரும்வகையில் இரவுநேர தொடருந்து சேவை இன்று கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்திற்கான அனைத்து தொடருந்து சேவைகளையும் விரைவில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.