மாவைக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள அநுர!
tamil news: இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த மாவை சேனாதிராசாவுக்கு அநுரகுமார திசாநாயக்க நேரில்சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல் நலக்குறைவினால் நேற்றிரவு(29.01.2025) காலமான மாவை சேனாதிராசாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளையதினம்(30.01.2025) யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள அநுரகுமார திசாநாயக்க மாவை சேனாதிராசாவின் வீடடுக்குச்சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இதற்கான முன்னேற்பாடுகளில் பாதுகாப்பு வட்டாரங்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அநுரகுமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நாளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.