இன்றுமுதல் தினசரி மின்வெட்டில் ஏற்பட்ட மாற்றம் – முக்கிய அறிவிப்பு
tamil news:
இன்றுமுதல்(14.02.2025) தினசரி மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அதாவது நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து ஒரு தொகுதி மின்னுற்பத்தி அலகு தேசிய மின் விநியோக வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இன்று(14.02.2025) முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வாரம் குரங்கு ஒன்றினால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டதையடுத்து ஜே.வி.பி அரசாங்கத்தை சேர்ந்த ஒருவர் குரங்குகளை தனித்தீவில் விடவுள்ளதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்
