வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

கண்டி தேசிய மருத்துவமனை அபிவிருத்திக்கு 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!


tamil news:

கண்டி தேசிய மருத்துவமனையின் அபிவிருத்தி பணிகளுக்காக 1,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


அவர் சமீபத்தில் மருத்துவமனையில் நிலுவையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிட்டபோது, இதனை அறிவித்தார்.


இதன் பேரில், New Cancer Complex, Bone Marrow Transplant Unit, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, தனிமைப்படுத்தல் வார்டு வளாகம் போன்ற முக்கிய கட்டமைப்புகளின் பணிகளை முடிக்க இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.


திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதால், அவை விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டும். இதற்கான கட்டுமான செலவுகளை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


மேலும், மருத்துவமனையில் நோயாளிகள் அடையும் இடநெரிசலை குறைக்க வெளிநோயாளர் பிரிவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


தேசிய மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகளின் சேவைகளை அதிகரிக்கவும் அரசாங்கம் விரிவான திட்டங்களை தயாரித்து வருகின்றது.