வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

உள்ளூராட்சி சபையில் வெற்றிவாகை சூடுவோம்! சூளுரைத்தார் பிரேமதாச வாரிசு


tamil news: மக்கள் ஆதரவுடன் எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலில் வெற்றியடைவோம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைத்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


"தேசிய மக்கள் சக்தி எதிரணியில் இருந்தபோது விவசாயிகளுக்காக குரல் எழுப்பி நெல்லுக்கான நிர்ணய விலையை தீர்மானிப்போம் அதனைச் சட்டமாக்குவோம் என கூறினர்.


ஆனால் இன்று அமைச்சர் பதவிகளை தை;துக்கொண்டு உரமானியமாக 25,000 ரூபாயை கூட உரிய நேரத்தில் வழங்கமுடியவில்லை.


ஒரு தரப்பினருக்கு 15,000 ரூபா, மற்றுமொரு தரப்பிற்கு 10,000 ரூபா என்றும் வழங்கப்பட்டதே தவிர 25,000 ரூபா இன்னும் மொத்தமாக போய்ச்சேரவில்லை.


நாடு வங்குரோத்துநிலையை அடைந்ததுடன்,

நாட்டின் பெரும்பாலான மக்களின் ஜீவனோபாயம் வீழ்ச்சியடைந்து பலர் வறுமை அடைந்தனர்.


இன்றும் நமது நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கான தெளிவான திட்டமென்று ஒன்று இல்லை.


தற்போதைய அரசாங்கமும் கூட ஆட்சிக்குவந்த பிறகு முறையான திட்டத்தை செயல்படுத்தாது தற்காலிக நிவாரணங்களை வழங்கிவருகின்றது.


ஆக குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஏழ்மையை போக்குவதற்கான இலக்குடனான திட்டம் வகுக்கப்படவேண்டும்.


உள்ளூராட்சிமன்ற சேவைகள் இன்றும் கூட நடந்தபாடில்லை.


எனவே நடக்கப்போகும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது.


கிராமத்தையும், நகரத்தையும் பாதுகாக்க மக்கள் நம்பிக்கை வைக்கும் திறமையான வேட்பாளர்களை நாம் களமிறக்குவோம்.


மக்கள் ஆதரவோடு நாம் வெற்றி பெற வழிவகுத்து பிரச்னைகளுக்கு முறையான தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம்."

என தெரிவித்தார்.