கட்சி நிர்வாகிகள் களத்திற்கு செல்ல தயங்கக்கூடாது! த.வெ.க தலைவர்
tamil news: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதாவது விஜய் கடந்த 28ம் திகதி முதல் 4 நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதுமட்டுமன்றி தேர்வுசெய்யப்பட்ட நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்தி வருகின்றார்.
அதன்படி 234 சட்டசபைதொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்டசெயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
அதில் முதற்கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டமென புதிதாக மாவட்டசெயலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தேர்வுசெய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் உரையாடும்போது,
"2026ம் ஆண்டு இலக்கை அடைய என்ன செய்யவேண்டுமோ அதை செய்வேன்.
மக்கள் பணிகளை இனி தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்."
என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
"கட்சி நிர்வாகிகள் களத்திற்கு செல்ல தயங்ககூடாது.
உங்கள் உழைப்பில்தான் கட்சியின் வளர்ச்சியும் உள்ளது.
நானும் உழைக்கின்றேன்,
நீங்களும் உழையுங்கள்; வெற்றி அடைவோம்."
என குறிப்பிட்டுள்ளார்.