மெக்ஸிகோ அரசு Google-ஐ எதிர்த்து வழக்கு?
tamil news:
மெக்ஸிகோவின் வடகிழக்கு பகுதிக்கும் அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதிக்கும் இடையே உள்ள கடற்பகுதியை 'கல்ப் ஆஃப் மெக்ஸிகோ' என மாற்றாமல்,
'கல்ப் ஆஃப் அமெரிக்கா' என குறிப்பிடுவதால், Google-க்கு எதிராக சிவில் வழக்கு எடுக்க முடியுமா என்ற எண்ணத்தில் மெக்ஸிகோ அரசு உள்ளது.
மெக்ஸிகோ குடியரசுத் தலைவர் கிளாடியா ஷெயின்பாம் இதனை உறுதி செய்துள்ளார்.
இந்த கடற்பகுதி உலகளவில் 'கல்ப் ஆஃப் மெக்ஸிகோ' என அறியப்படுகிறது.
ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இதன் பெயரை மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதன் பின்னர், இப்பகுதி அரசியல் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,
ஜனாதிபதி ஷெயின்பாம்,
"அமெரிக்காவின் உத்தரவு அதன் நிலத்தொகுதியுக்குள் மட்டுமே பொருந்தும்.
மெக்ஸிகோ, அதன் கடல்பரப்பினை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது.
எனவே, இது எங்களது இறையாண்மை உடைய பகுதி"
எனக் கூறினார்.
மேலும், மெக்ஸிகோ அரசு Google-க்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பி,
"முழு கல்ப் ஆஃப் மெக்ஸிகோவை 'கல்ப் ஆஃப் அமெரிக்கா' என அழைக்க முடியாது"
என்று தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
இருந்தாலும், Google தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்பது இதுவரை தெளிவாக இல்லை.
Google, தனது X (முன்னாள் Twitter) கணக்கில் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில்,
"அதிகாரப்பூர்வ அரசுத் தரவுகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டால், அவற்றை நாங்கள் அப்படியே பின்பற்றுவோம்"
என்று தெரிவித்துள்ளது.