வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரமான சிலை பொதுமக்களுக்கு அர்ப்பணம்!


tamil news:

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்களிப்புக்காக புகழ்பெற்ற சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயர கற்சிலை நேற்றையதினம்(17.05.2025) திறந்து வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா அமைப்பின் ஏற்பாட்டிலும்,

தொழிலதிபர் மு. செல்வராசாவின் ஆற்றல்மிக்க முயற்சியிலும் நடை பெற்றது.


இது சுவாமிக்கு அமைக்கப்பட்ட முதலாவது முழுமையான கற்சிலை என்பது குறிப்பிடத்தக்கது.


சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் சபையின் தலைவர் க. பாஸ்கரன் தலைமை வகித்தார்.


கொழும்பு இராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரீனா முரளிதரன், மாநகர சபை ஆணையாளர் என். தனஞ்செயன், பிரதேச செயலக அதிகாரிகள், முன்னாள் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.


இதன்போது பிரதம அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.


அதன் பின்னர் சுவாமியின் திருவுருவச் சிலை பொதுமக்களுக்கு திறந்து காட்டப்பட்டது.


கூடுதலாக “யாழ்” மற்றும் “யாழ் நூல்” எனும் இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டதுடன்,

சுவாமியின் நினைவுக்கல்லும் இந்நிகழ்வில் நாட்டப்பட்டது.