கற்பிட்டி மெய்வல்லுனர் போட்டியில் கண்டல்குழி முஸ்லிம் பாடசாலை வரலாற்றுச் சாதனை!!!
event update:
இம்முறை நடைபெற்ற கற்பிட்டி கோட்டமட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கண்டல்குழி முஸ்லிம் மகாவித்யாலயம் 4 முதலாம் இடத்தினையும்,
2 இரண்டாம் இடத்தையும்,
1 மூன்றாம் இடத்தினையும் பெற்று மொத்தமாக 27 புள்ளிகளை பெற்றுள்ளது.
இவ்வாறு கற்பிட்டி கோட்டமட்ட தரப்படுத்துதலில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயம் எட்டாம் இடத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலயின் அதிபர் எம்.பீ.எம் ஜெசீம் தெரிவித்துள்ளார்.
இதில் 20 வயது பிரிவில் எம்.எப் நப்ரினா ஈட்டி எறிதல் மற்றும் தட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் முதலாம் இடத்தையும்,
குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
அதேபோல 18 வயதின் கீழ் எப். ரீஹா ஈட்டி எறிதல் போட்டி மற்றும் தட்டு எறிதலில் முதலாம் இடத்தையும்,
குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
மேலும் 14 வயதுப் பிரிவில் எப் இமானி குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலையின் வரலாற்றில் சாதனையை நிலைநாட்டி பெருமை சேர்த்துள்ளனர்.
இம் மாணவர்களுக்கும் பயிற்சிகளை வழங்கிய விளையாட்டு ஆசிரியரஎக ளுக்கு அதிபர், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் அனைவரும் அடுத்தகட்டமாக புத்தளம் வலயமட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.