மின்சாரக் கட்டணம் 33% உயர்வு! முக்கிய அறிக்கை அடுத்த வாரம் சமர்ப்பிப்பு
tamil news:
இலங்கை மின்சாரசபை மின்சார கட்டணங்களை அதிகரிப்பதற்கான முன்மொழிவை அடுத்தவாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச நாணயநிதியத்தின் வழிகாட்டலுக்கு ஏற்ப மின்சார உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகளை பிரதிபலிக்கும் விலையை நாட்டில் நடைமுறைப்படுத்துவது அவசியமாகப்படுகின்றது.
சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், மின்சாரக் கட்டணத்தை குறைந்தபட்சம் 33% அல்லது அதற்கு மேல் உயர்த்தும் வகையில் இந்த முன்மொழிவு தயாராகியுள்ளமை கவனத்திற்குரியது.
அடுத்த கட்ட பணம் வழங்கப்படுவதற்கு முன்பாக, மின்சாரத்திற்கான சரியான செலவுகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும், இத்திட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
