போர்நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகும் காஷ்மீரில் வெடிப்புகள்: பாகிஸ்தான் விளக்கம்
tamil news:
இந்தியாவும் பாகிஸ்தானும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்திய-காஷ்மீர் பகுதியில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பயங்கர வெடிப்புகள் நடந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவை ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்திய அரசாங்கம் இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால் இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார்,
"பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறுவது துல்லியமற்றதாகும்.
எங்கள் தரப்பில் இருந்து எந்தவிதமான ஒப்பந்தமீறல்களும் இல்லை"
என தெரிவித்துள்ளார்.
மேலும்,
"இந்தியாவுக்கு எதிராக கடந்த நாட்களில் கிடைத்த முன்னேற்றத்தை பாகிஸ்தான் மக்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்"
என்றும் அவர் கூறியுள்ளார்.

