தமிழின அழிப்பை நினைவுகூறும் வாகன பவனி யாழில் தொடக்கியது!
tamil news:
தமிழ் மக்களின் இனவழிப்பை உலகுக்கு நினைவூட்டும் வகையில் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்தைத் தொடக்கமாகக் கொண்ட வாகன பவனி ஒன்று இன்றையதினம்(14.05.2025) புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தப் வாகன பவனி,
தமிழர்களின் துயர வரலாற்றை வெளிக்காட்டும் நோக்கத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றி இறுதியில் முள்ளிவாய்க்காலை சென்றடைதலாக திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தல்
பவனிக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்களில்
"தமிழ் இனவழிப்புக்கு நீதி வேண்டும்",
"சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம்"
"தேசம், இறைமை, சுயநிர்ணயம் என்ற பெருமை மீட்டுத் தரப்படவேண்டும்."
போன்ற வாசகங்களுடன் பதாகைகள் ஏற்றப்பட்டிருந்தன.
மேலும் குறித்த வாகன பவனி நகரும் வழித்தடங்களில் பொதுமக்கள் நிறைவாக பங்கேற்று,
இனவழிப்பை நினைவுகூறும் நினைவுத்தூபிகளுக்கு மலரஞ்சலி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.