செம்மணியில் மனித புதைகுழி அகழ்வுப்பணி இன்று ஆரம்பம்!!!
tamil news:
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற அனுமதியுடன் அடுத்தகட்ட அகழ்வுப் பணிகள் இன்றையதினம்(15.05.2025) மீண்டும் ஆரம்பமாக உள்ளது.
கடந்த பெப்ரவரி மாத தொடக்கத்தில், செம்மணி இந்து மயானத்தில் நடைபெற்ற அபிவிருத்திப் பணிகளின்போது மனித எலும்புகள் போல் தோன்றும் சிதலங்கள் மண்ணுக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டன.
இதையடுத்து சம்பவம் தொடர்பான தகவல்கள் காவற்துறையினரிடம் தெரியப்படுத்தப்பட்டநிலையில்,
அவை யாழ் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அதன் அடிப்படையில் பெப்ரவரி 20ம் திகதி நீதிவான் நேரில்வந்து சம்பவஇடத்தில் ஆய்வு செய்தார்.
அந்த நேரத்தில் மேலதிக ஆய்வுகளுக்காக சம்பந்தப்பட்ட இடம் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என்றும்,
மேலும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே துறைசார் நிபுணர் பேராசிரியர் ரவீந்திரனாத் சோமதேவ தலைமையில் நாளை முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மே மாதம் 3ஆம் திகதி பேராசிரியர் சோமதேவ சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.