வெசாக் பார்க்கசென்ற இளைஞர்களால் அடித்துக்கொல்லப்பட்ட நபர் – கொழும்பில் சம்பவம்!!!
tamil news:
கொழும்பில் வெசாக் பார்க்கவந்த இளைஞர்கள் குழுவால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெமட்டகொட பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் நிரந்தர வசிப்பிடம் இல்லாத நபர்ஒருவருக்கும்,
19 முதல் 22 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகியுள்ளது.
தொடர்ச்சியாக அந்த வாக்குவாதம் தீவிரமடைந்து அடிதடி மோதலாக மாறியுள்ளது.
இதில் 38 வயதான குறித்த நபர் மரக்கட்டைகள் மற்றும் கைகளால் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை குறித்த இளைஞர்கள் அடித்து உதைத்த நிலையில் அவர் மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்(13.05.2025) இரவு நடந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரோந்து காவற்துறை காயமடைந்த நபரை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துசென்றபோதிலும்,
வைத்தியசாலையில் அவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனைவரும் பொரளை, வனாத்தமுல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.