இரு சகோதரர்களுக்கிடையில் அரிவாள்வெட்டு!!! வெளியான காணொளி
tamil news:
பதுளை நகர மத்தியில் நேற்றையதினம்(20.05.2025) மாலை இரு சகோதரர்களுக்கிடையில் நிகழ்ந்த வாக்குவாதம் கொடூர அரிவாள் வெட்டாக மாறியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மூத்த சகோதரர் ஒருவர் அரிவாளை பயன்படுத்தி தனது இளைய சகோதரரை தாக்கிய காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்த இரு சகோதரர்களுக்கும் இடையே முற்றிப்பட்ட நிலை தொடர்ந்துவருவதாகவும்,
இளைய சகோதரர் முன்பே மூத்தவரை தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் கொடூர தாக்குதலுக்குள்ளான இளைய சகோதரர் கடுமையாக காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலை அறிக்கையின்படி,
அவசர அறுவை சிகிச்சை மூலம் அவரது உயிரை காப்பாற்ற முடியுமாம்.
மேலும், தாக்குதலுக்குள்ளான நபர் சில வாரங்களுக்கு முன்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றிருந்ததாகவும்,
இருவரும் அடிக்கடி சண்டையிடும் நிலை தொடர்ந்துவருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

