வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவில் முக்கிய தீர்ப்பு: வெடித்தது புதிய சர்ச்சை!


tamil news:

ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு மீண்டும் ஒருமுறை விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.


இந்திய உச்சநீதிமன்றம் நேற்றையதினம்(20.05.2025) வழங்கிய தீர்ப்பு ஒரு ஈழ அகதி தொடர்பாக இருந்தது.


அதில்

"எல்லாரும் வந்து தங்கிச்செல்வதற்கு இந்தியா ஒன்றும் சத்திரமில்லை."

என்ற பொருள்பட உச்சநீதிமன்ற நீதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த தீர்ப்பு, பலர் பார்வையில் ஈழத்தமிழர்களின் நம்பிக்கையைப் புறக்கணிக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது.


மகாத்மா காந்திக்கு சிலைகள், பூங்காக்கள், சதுக்கங்கள் என இலங்கையில் இந்தியா குறித்த போதுமான ஆதரவை மக்களால் காண முடிகின்றது.


எனினும் இந்தியாவின் நடத்தை பின்வரும் ஒரு எதிர்மறை பார்வையை உருவாக்கி வருகின்றது என்ற விமர்சனமும் எழுகின்றது.


மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களுக்காக இந்தியா இதுவரை எடுத்த செயல்கள் குறித்து கேள்விகள் எழுகின்றன.


பலர் உண்மையில் அவர்களுக்கு ஆதரவாக கணிசமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்ற வருத்தத்தையும் பகிர்ந்துள்ளனர்.