நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடிய கைதி!
tamil news: நேற்றையதினம்(26.08.2024) மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்திலிருந்து தண்டனைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார்.
மட்டக்களப்பு உட்பட பல இடங்களில் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற தண்டணை வழங்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி, இரணைமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய கைதியை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக காவற்துறையினர் அழைத்துச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் 12 மணியளவில் கழிவறைக்கு செல்லவேண்டுமென கைதி கூறியதால் சிறைக்காவலர் அழைத்துச்சென்று விட்டுவிட்டு வெளியில் காவல் நின்றுள்ளார்.
இதனையடுத்து கழிவறைக்கூரையை கழற்றி அதனூடாக தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து அவரை கைதுசெய்ய காவற்துறையும், சிறைக்காவர்களும் தீவிர தேடுதலில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
