யாழ் மாநகர சபையின் பொறுப்பற்ற செயல்கள்: ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா?
tamil news:
யாழ்ப்பாண மாநகர சபையின் பொறுப்பற்ற செயல்பாடுகள் தொடர்பாக சமீப காலங்களில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
பல தவறுகளை தொடர்ச்சியாக செய்து வரும் மாநகர சபை,
அவற்றை திருத்தும் முனைப்போடு செயல்படாமல் அசம்பாவிதமாக செயல்படுவதாக மக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகரசபையின் கழிவு சேகரிப்பு மையத்தில்,
கழிவுகளை அடிக்கடி தீ வைத்து எரிப்பது வழக்கமாகி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகை வழியே பரவும் பாதிப்புகள்
இதன் காரணமாக மருத்துவ கழிவுகள் மற்றும் பல்வேறு வகையான கழிவுகள் எரியும்போது உருவாகும் புகை, வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் பரவி பொதுமக்களின் சுகாதாரத்தை மோசடிக்கின்றது.
இந்த புகை காரணமாக அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் அந்த வழியே செல்லும் பயணிகள் சுவாசக்குழாய் தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்படுகின்றது.
அதேசமயம் புகை மண்டலத்தில் வாகனங்கள் எதிரே தெரியாமல் விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகளும் ஏற்படலாம்.
கடந்த ஆண்டு ஒரு முறை இவ்வாறு கழிவுகளை எரிக்கும் போது,
அந்த வழியாக பைக்கில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவருக்கு உடனடி உதவி செய்த சம்பவம் இடம்பெற்றது.
மாநகர சபையின் பொறுப்பு
இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுமாயின்,
அதன் இழப்பீடு யார் வழிகாட்டுவது?
மக்கள் சுகாதாரமான இடத்தில் வாழும் உரிமை கொண்டவர்கள்.
அதேபோல் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு.
இந்த வகை செயல்கள், சட்டப்படி யாழ் மாநகரசபை குற்றவாளியாக கருதப்படும்.
மேலும் பல்வேறு சந்தைகளில் இறந்த கால்நடைகள் கூட சாலைகளில் விடப்பட்டு, அவற்றை அகற்றும் நடவடிக்கையில் மாநகர சபை ஆர்வம் காட்டவில்லை.
கழிவு அகற்ற முறைகள் சரியில்லை
மேலும் கழிவுகளை அகற்றும்போது உரிய முறையில் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படாததால் அந்த கழிவுகள் சாலைகளில் பரவி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகின்றது.
மக்களின் கோரிக்கை
மாநகரசபை மக்களை பாதுகாக்கும் பதவியில் இருப்பவர்கள் தான் மக்களுக்கே தொந்தரவு தரும்நிலை உருவாக்குவது, மக்களை வேதனைப்படுத்தும் செயல் என கூறப்படுகின்றது.
இவ்வாறான கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் பணியில் மானிப்பாய் பிரதேச சபை ஈடுபட்டு வருகின்றது.
அவர்கள் மாநகர சபையிடம் இந்த கழிவுகளை வழங்குமாறு கேட்டபோதும் மாநகரசபை மறுத்துவிட்டதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
ஆளுநரின் தலையீடு அவசியம்
இதனால் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அவர்கள், மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர்(செயல்பாடு) S.P. தவகிருபா மற்றும் மாநகர சபை ஆணையாளர் ச. கிருஷ்ணேந்திரன் ஆகியோர் விரைந்து தலையீடு செய்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென மக்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
