வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

வலம்புரியுடன் மூன்று பேர் கைது - வவுனியாவைச் சேர்ந்தவரும்உள்ளடக்கம்!


tamil news:

இன்றையதினம்(11.02.2025) செவ்வாய்க்கிழமை திருகோணமலை இறக்கக்கண்டியில் சுமார் 4 கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 4 வலம்புரி வகை சங்குகளுடன் 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர், திருகோணமலை இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்த வயது 33 மற்றும் 39 வயதுடைய இருவருடன் சந்தேகத்திடமாக நின்றதிற்கமைய கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


விசாரணையில் சந்தேகநபர்கள் மூவரும் குறித்த வலம்புரிச் சங்குகளை விற்பனைசெய்ய முயன்றது தெரியவந்துள்ளது.



மேலும் குறித்த வலம்புரிச்சங்குகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக சந்தேசநபர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 05 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மூவரும் எதிர்வரும் மார்ச் மாதம் 25ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வலம்புரி சங்கு நேர்மறையான சக்தியுள்ளது எனவும், அதிஸ்டத்துக்குரிய பொருள் எனவும் மக்களிடம் நம்பிக்கையுள்ளமை குறிப்பிடத்தக்கது.