டெல்லி: ரயில் நிலையத்தில் நெரிசல்! குழந்தைகள் உள்ளடங்களாக 18 பேர் உயிரிழப்பு!
tamil news:
இந்தியாவின் தலைநகர் டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயணிகள் நெரிசலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 10 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு இந்திய நேரப்படி 8 மணியளவில்(14:30 GMT) நடந்ததாக கூறப்படுகிறது.
மகாகும்பமேளா திருவிழாவில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான ஹிந்துப் பக்தர்கள் புறப்பட தயாராகியிருந்த போது,
டெல்லி ரயில் நிலையத்தின் இரு பிளாட்பாரங்களில் பெரும் நெரிசல் ஏற்பட்டதாக அறியப்படுகிறது.
இந்த விழா, தலைநகரிலிருந்து சுமார் 624 கிமீ தொலைவில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெறுகிறது.
டெல்லி மாநில முதலமைச்சர் அதிஷி இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக உறுதிசெய்துள்ளார்.
ஆனால், NDTV உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் 18 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.
இந்தியத்தின் ரயில்வே அமைச்சராக உள்ள அஷ்வினி வைஷ்ணவ்,
பயணிகளின் திடீர் பெருக்கை கட்டுப்படுத்த நான்கு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும்,
இந்த சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Labels:
வெளிநாட்டு செய்திகள்
