துபாய் செல்லும் திருடரின் கனவு விமானநிலையத்திலேயே முடிந்தது!
tamil news:
யாழ்ப்பாணத்தில் ஒருவரை கடத்தி சுமார் ரூ. 8.4 மில்லியன் பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேகநபர் இன்று(16.02.2025) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(BIA) கைதுசெய்யப்பட்டார்.
காவற்துறையினரின் தகவற்படி,
இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி 8ம் திகதி யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் நடந்ததாககூறப்படுகின்றது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் கடத்தப்பட்டு சுமார் ரூ. 8.478 மில்லியன் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
தொடர்ந்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னர் குற்றத்தில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்து அவருக்கெதிராக தேடுதல் அறிவித்தல் வெளியிடப்பட்டநிலையில்,
இரகசிய தகவலின் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் அவரை துபாய்க்கு பயணிக்க முயன்றபோது கைதுசெய்துள்ளனர்.
மேலும் தற்போது கைதானவர் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்


