வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

சாய்ந்தமருதில் 18Kg கேரளக்கஞ்சாவுடன் ஒருவர் கைது!


tamil news: சாய்ந்தமருதில் 18Kg 169g கேரளக்கஞ்சாவுடன் ஒருவர் இன்று(10.02.2025) கைதுசெய்யப்பட்டுள்ளார்.


அம்பாறை, சாய்ந்தமருது காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று(10.02.2025) திங்கட்கிழமை காலைவேளையில் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இதேபோல கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கடந்த(04.02.2025) திகதி கேரளா கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.


சந்தேக நபர்கள் இருவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 33 வயது மதிக்கத்தக்க ஒருவரின் வீட்டினை சோதனை செய்தவேளை கட்டிலின் கீழ் பகுதியில் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டதுடன்,

சந்தேகத்தின் பேரில் வீட்டு உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


குறித்த வீட்டிலிருந்து 18Kg 169g கேரளக்கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.


சந்தேகநபர் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது காவற்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி காவற்துறை பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.