ஜே.வி.பி நாஞ்சில் இளங்குமரன் சாலை விபத்தில் படுகாயம்!!!
tamil news:
யாழ்ப்பாணம் மாவட்ட ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் சாவகச்சேரி பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் வழியில்,
பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் சாவகச்சேரி நோக்கி திரும்பிய ஒரு லொறியுடன் மோதியதில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் எம்.பி. இளங்குமரன், அவருடைய உதவியாளர் மற்றும் வாகனத்தின் சாரதி காயமடைந்த நிலையில்,
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி காவற்துறையினர் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்