டெய்ஸி அன்ரிக்கு வெளிநாட்டு பயணத் தடை மீண்டும் உறுதியானது!
tamil news:
காவற்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவற்துறை மாஅதிபர் புத்திக மனதுங்க, டெய்ஸி போரஸ்டுக்கு வெளிநாட்டு பயணத் தடைவிதிக்கப்பட்டுள்ளதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது யோஷிதா ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி விசாரணையுடன் தொடர்புடையதாகும்.
முன்னதாக வழக்கறிஞர் பிரேமநாத் டோலவத்த,
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இத்தகைய பயணத் தடை எதுவும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்ததாக ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.
மேலும், நீதிமன்றம் உத்தரவிடாத தகவல்களை வெளிப்படுத்தியதன் மூலம், காவற்துறைப்பேச்சாளர் குற்றஞ்செய்துள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த காவற்துறை பேச்சாளர் புத்திக மனதுங்க,
தனது முந்தைய அறிக்கையில் உண்மையான தகவல்களை மட்டுமே தெரிவித்ததாகவும்,
டெய்ஸி போரஸ்டுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை இன்னும் செயலிலுள்ளதாகவும் கடந்த சனிக்கிழமையன்று(15.02.2025) மீண்டும் உறுதிப்படுத்தினார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்
