உடுவில் பகுதியில் கோரமான விபத்து; 11 வயது சிறுவன் பலி!
tamil news:
யாழ்ப்பாணம், சுன்னாகம் உடுவில் பகுதியில் நேற்றயதினம்(03.03.2025) நடந்த கோரமான விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்றையதினம்(03.03.2025) நெல் அறுவடை இயந்திரத்தை எடுத்துச்சென்ற டிராக்டரில் சிறுவன் ஏறமுயன்றபோது தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதன்போது, தந்தை ஓட்டிய டிராக்டரின் பின் சக்கரப்பகுதியில் அடிபட்டு,
கடுமையான காயங்களுடன் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து சுன்னாகம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்
