யாழ். மாநகரசபையால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது!
tamil news:
யாழ்ப்பாணத்தில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த இளைஞனிடம் யாழ். மாநகரசபை வரி அறவிடுவதாக கூறி உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, இளைஞனின் வியாபாரத்தை நிறுத்திய சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றது.
அதில் பாதிக்கப்பட்ட குறித்த இளைஞனுக்கு இன்றையதினம்(03.03.2025) ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்களை லஷ்மிகா அறக்கட்டளை உதவிப்பணமாக கொடுத்துதவியுள்ளது.
அதாவது
குறித்த இளைஞர் நடந்த சம்பவம் குறித்தும் தன்னுடைய கருத்தினையும் தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து லஷ்மிகா அறக்கட்டளையின் நிறுவுனர் தர்மிகா அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் உதவித் தொகையை வடமராட்சி கிழக்கு சமூக மாற்றத்திற்கான ஊடகமையம் ஊடாக வழங்கிவைத்தார்.
தொடர்ந்து ஊடக மையத்தின் ஊடக அமையத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.த காண்டிபன் கருத்துதெரிவிக்கையில்,
லஷ்மிகா அறக்கட்டளை நிறுவுனருக்கு நன்றிதெரிவிப்பதுடன் மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டு, அவர்களது மனித உரிமைகளும் மதிக்கப்பட்டு சமூக மாற்றம் ஒன்றை உருவாக்க அனைவரும் முன்வரவேண்டுமெனவும் தெரிவித்தார்.

