"எங்களிடம் எரிபொருள் நிலையங்கள் இல்லை" 3 SJP எம்.பிக்கள் எதிர்ப்பு
tamil news:
கயந்த கருணாதிலக, ஹர்ஷன ராஜகருண, கின்ஸ் நேல்சன் ஆகிய மூன்று எதிர்க்கட்சி எம்.பிக்கள், அரசாங்கம் எரிபொருள் நிலையங்களை அரசியல் தொடர்புகளின் மூலம் பெற்றவர்கள் பற்றிய பட்டியலில் தங்களது பெயர்கள் சேர்த்துள்ளதை கண்டித்துள்ளனர்.
அதாவது,
பாராளுமன்றத்தில் உரையாற்றிய கயந்த கருணாதிலக,
தனது குடும்பத்திலுள்ள எரிபொருள் நிலையம் 1955 ஆம் ஆண்டு அவரது தாத்தாவால் தொடங்கப்பட்டதாகவும்,
இது சட்டவிரோதமல்ல என்றும்,
தனது பெயர் ஏன் பட்டியலில் இடம்பெற்றது என்பதை அரசு விளக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
மேலும் ஹர்ஷன ராஜகருண தனது பெயரும் தவறாக பட்டியலில் சேர்க்கப்பட்டதாகக் கூறினார்.
“எங்கள் குடும்பத்தில் எரிபொருள் நிலையம் இருந்தது.
ஆனால் தற்போது எங்களிடம் எரிபொருள் நிலையம் இல்லை”
என்று அவர் விளக்கினார்.
கின்ஸ் நேல்சன்(பொலன்னறுவை மாவட்ட எம்.பி.) தனக்கெந்த எரிபொருள் நிலையமும் இல்லை என்றும்,
தவறான தகவலை திருத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரம், உதவி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர நேற்றையதினம்(02.03.2025) பாராளுமன்றத்தில்,
சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் நாட்டின் எரிபொருள் விநியோகச் சிக்கலுக்கு காரணமாக இருப்பதாக கூறிய பின்னர் எழுந்துள்ளது.
