கிழக்கு கல்முனை: சந்தேகத்திற்கிடமான தீவிரவாத குழு விசாரணையில்...
tamil news:
"கிழக்கு கல்முனை பகுதியில் செயல்படுகின்றதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான ஒரு தீவிரவாத குழுவை அடையாளங்காண புலனாய்வுப்பிரிவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்"
இவ்வாறு அமைச்சரவையின் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(04.03.2025) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகசந்திப்பில் பேசிய அமைச்சர்,
இவ்வாறான குழுவினைப் பற்றிய ஆரம்ப தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்,
அதனைத் தொடர்ந்து மேலும் விபரங்களைத் திரட்டும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து
"இந்த குழு எவ்வித நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதா?"
எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
"தற்போது, கிழக்கு மாகாணத்தில் இத்தகைய ஒரு குழு இயங்குவதாக மட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
புலனாய்வு பிரிவுகள் இதை உறுதிப்படுத்தும் பணியில் உள்ளன.
தேசிய பாதுகாப்பு தொடர்பான சில முக்கிய விவகாரங்களைப் பற்றியும் ஜனாதிபதி அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இப்போது உறுதியாகக் கூறமுடியாத ஒன்று இருந்தாலும்,
பாதுகாப்பு அமைப்புகள் இந்த நிலைமையை மிகக் கவனமாகக் கண்காணித்து வருகின்றன"
என்று தெரிவித்துள்ளார்.
