வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஆரம்பிக்க முயற்சி! நடக்கிறது ஆலோசனை


tamil news:

வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஒன்றை நிறுவும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்படும் முயற்சியின் ஒரு பகுதியாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று சமீபத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.


இக்கலந்துரையாடலில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.


மருத்துவபீடம் நிறுவப்படுவதன் மூலம் வவுனியா மாவட்டத்தின் மருத்துவ வசதிகள், கல்வி வாய்ப்புகள் மற்றும் பொது அபிவிருத்தி நடவடிக்கைகள் வலுப்பெறும் என்ற நம்பிக்கையுடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.


இந்நிலையில் மருத்துவபீடம் அமைக்க வேண்டிய நிதி வசதிகள், திட்டமிடல் மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உறுப்பினர் மஸ்தான் தனது கருத்துகளை முன்வைத்தார்.


மேலும் இந்த முயற்சியை கட்டியெழுப்பும் நோக்கில் தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியை பெறுவதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இக்கலந்துரையாடலில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஏ.அற்புதராஜா, பல்கலைக்கழக துறைத் தலைவர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் பல்கலைக்கழகத் துறையில் ஆர்வமுள்ள நபர்கள் கலந்து கொண்டனர்.