பாகிஸ்: அணு ஆயுத களஞ்சியசாலை தாக்கப்பட்டது? சர்வதேச ஊடகங்கள் மௌனமா?
tamil news:
பாகிஸ்தானின் Kirana Hills பகுதியில் அமைந்துள்ள ஒரு அணுஆயுதக் களஞ்சியத்தில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் செய்திகளை சில இந்திய ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
இந்தத் தகவல்களின் படி,
இந்திய ஏவுகணைத் தாக்குதலால் அங்கு அணுசக்தி தொடர்பான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும்,
இதனையடுத்து ஏற்பட்ட அவசரமான சூழ்நிலை காரணமாகவே பாகிஸ்தான் திடீரென யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
சில இந்திய ஆய்வாளர்களும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர்.
அணுக்கசிவு போன்ற சம்பவங்கள் உலகளவில் மிகுந்த கவலையை ஏற்படுத்தக்கூடியவை.
அத்தகைய செய்திகள் பெரும்பாலான சர்வதேச ஊடகங்களில் முக்கியத் தலைப்பாக வெளிவரும் ஒரு நிலை ஏற்படும்.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்,
உலகின் முக்கிய ஊடகங்கள் எதுவும் இதுபோன்ற சம்பவம் குறித்து இதுவரை எந்தவிதமான செய்தியையும் வெளியிடவில்லை என்பதே பெரும் கேள்வியாக இருக்கின்றது.
இந்த விவகாரம் உண்மையா அல்லது பரப்பப்படும் வதந்தியா என்பதை உறுதிசெய்ய வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது.