புத்தளத்தில் பல்கலைக்கழக வழிகாட்டல் கருத்தமர்வு!
tamil news:
புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பு மற்றும் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி நிர்வாகம் ஆகியன ஒன்றிணைந்து இன்றையதினம்(17.05.2025) புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில் பொது வழிகாட்டல் நிகழ்வு மற்றும் துறைசார் வழிகாட்டல் நிகழ்வு என இரு கட்டங்களாக இந்த நிகழ்வு நடைபெற்று முடிந்தது.
நிகழ்வின்போது வளவாளர்களாக புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின் முன்னாள் தலைவரும்,
தற்போதைய ஆலோசனைக்குழு உறுப்பினரும், தொழில் வழிகாட்டல் ஆலோசகரமான எம்.ஆர்.எம்.ஷவ்வாபும்,
துறைசார் வழிகாட்டல் நிகழ்வுகளை அந்தந்த துறைசார் வளவாளர்களாக புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் ஆலோசனைக்குழு உறுப்பினரும் கலந்துகொண்டனர்.
மேலும் கொழும்பு பல்கலைக்கழக கணக்கியல் துறையில் சிறப்பு பட்டம் பெற்றவரும்,
திறந்த பல்கலைக்கழக புத்தளம் கல்வி நிலையத்தின் வருகைதரு விரிவுரையாளருமான திருமதி ஆர்.ரப்பத், செல்வி எம்.ஏ.அம்ஜிதா, செல்வி இம்ரத் மர்வா மற்றும் செல்வி.பீ.என்.எப்.சப்னா ஆகியோரும் செயற்பட்டனர்.