வவுனியா: கஞ்சா வைத்திருந்த இளைஞன் கைது!
tamil news:
வவுனியா, தோணிக்கல் பகுதியில் சுமார் 2Kg கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா மாவட்ட குற்றவிசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான காவற்துறையினர் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வவுனியா, தோணிக்கல் பகுதியில் 34 வயதுடைய இளைஞர் ஒருவர் 2Kg கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கஞ்சா மீட்கப்பட்டதுடன் குறித்த இளைஞரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் கடந்த காலங்களை விட தற்போது வவுனியாவில் அதிக போதைப்பெருள் சார்ந்த கைதுகளும், போதைப்பொருள் மீட்பும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்
