காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல்சேவை முக்கிய அறிவிப்பு!
tamil news:
நாளையதினம்(12.02.2025) புதன்கிழமை காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் இடம்பெறும் பயணிகள் கப்பல்சேவை இடம்பெறாது என கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி அறிவித்துள்ளார்.
ஆரம்பத்திலிருந்து காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் கப்பல்போக்குவரத்தானது நாளையதினம்(12.02.2025) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தொழில்நுட்பகோளாறு காரணமாக கப்பல் சேவையானது நாளையதினம் இடம்பெறாது எனவும்,
கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறித்த கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இடம்பெறும் காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் போக்குவரத்தானது சமீப காலங்களில் சீரற்று காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்