இந்திய வெளியுறவு - ரணில் சந்திப்பு
tamil news:
ஓமான் நாட்டில் நடைபெறும் 8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில், இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளனர்.
இந்த மாநாட்டில் விருந்தினராக கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓமானுக்கு சென்றுள்ளார்.
இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் ஓமான் வெளியுறவு அமைச்சகம் இணைந்து நடத்தும் இந்த மாநாடு 2025 பிப்ரவரி 16, 17 ஆகிய நாட்களில் மஸ்கட் நகரில் நடைபெறுகிறது.
"கடல் தொடர்பான கூட்டாண்மையின் புதிய பரிமாணங்கள்" என்ற தலைப்பில் இந்த ஆண்டிற்கான மாநாடு அமைந்துள்ளது.
எனினும் தற்போதைய ஜனாதிபதி அழைக்கப்படவில்லை என்பது கவனத்திற்குரியது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்
