புகையிரதம் மோதியதில் தாய், மகள் படுகாயம்!!!
tamil news:
வெளிகம காவற்துறையினர் தெரிவித்ததின்படி,
வெளிகம ஹெட்டிவீதிய பகுதியில் இன்று(01.02.2025) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் தாய், மகள் இருவரும் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து ஹெட்டிவீதிய பகுதியில் உள்ள இரண்டாவது குறுகிய புகையிரத கடவையில் ஏற்பட்டது.
வவுனியாவிலிருந்து பெலியத்தாவுக்கு புகையிரதம் செல்லும்போது,
பாதிக்கப்பட்ட பெண் தனது மகளுடன் பாடசாலை வகுப்பிற்கு பயணித்தபோது எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டு விட்டது.
தாய், மகள் இருவரும் காயமடைந்த நிலையில் உடனடியாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிகம காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்

