வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

அம்பாறை: காரைதீவில் வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளை!


tamil news:

வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை காரைதீவு காவற்துறையினர் முன்னெடுத்துள்ளளனர்.


அம்பாறை மாவட்டம் காரைதீவு காவற்துறை பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் சுமார் 4 1/2 பவுண் தங்க நகைகள் உட்பட பணம் கடந்த வியாழக்கிழமை(27.02.2025) இரவு திருடப்பட்டுள்ளதாக மறுநாள் வெள்ளிக்கிழமை(28.02.2025) வீட்டு உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.


குறித்த திருட்டுச்சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளர்கள் குடும்ப சகிதம் அருகில் உள்ள சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அன்றைய தினம் இரவு 10 மணியளவில் தமது வீட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.


இந்நிலையில் நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி உட்பட அலுமாரி இருந்த அறை கதவு திறந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.


உடனடியாக காவற்துறையினருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.